வெறிச்சோடி காணப்படும் திண்டுக்கல்: முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு

முழு ஊரடங்கு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பொது போக்குவரத்thu நிறுத்தப்பட்டுள்ளதால், வெறிச்சோடி காணப்படுகிறது.

Update: 2021-05-10 12:21 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக,  இன்று 10.05.21 முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் சாலைகளில் போக்குவரத்து அதிக அளவில் இல்லை . பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக சொந்த வாகனங்களில் சென்று வருகின்றனர், மேலும் சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பணியாளர்கள் மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் பணிசெய்ய அலுவலகம் சென்று வருவதற்காக,  காலை - மாலை வேளைகளில் ஒன்பது பேருந்துகள் 9 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

பேருந்தில் பயணம் செய்யும் முன் களப்பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கட்டணம் செலுத்தி பயணித்து வருகின்றனர். தேனீர் கடைகள்,  மளிகைக்கடை காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள்,  மதியம் 12 மணி வரை திறந்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் சாலைகளில் சென்று வருகின்றனர். மற்றபடி மாவட்டத்தில் போக்குவரத்து குறைந்து பல இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. 

Tags:    

Similar News