பழனி மகளிர் காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை: பாெதுமக்கள் காேரிக்கை

பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போதிய பெண் காவலர்கள் இல்லாததால் பணிச்சுமை அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு.

Update: 2021-09-02 05:33 GMT

பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போதிய பெண் காவலர்கள் இல்லாததால் மற்ற பெண் காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பழனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் எப்போதுமே பரபரப்புடன்‌ காணப்படும். குடும்பபிரச்சினை, காதல் திருமணம் தொடர்பான பிரச்சினை, பாலியல் தொடர்பான பிரச்சினைகள் என தினமும் புதுப்புதுவிதமான சம்பவங்களை சந்திக்கும்‌ பழனி அனைத்து மகளிர்‌ காவல்நிலையத்தில் தேவையான அளவு காவலர்கள்‌ இல்லாததால் பெரும்‌ காவல்துறையினர் மற்றும்‌ பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.

சுழற்சி முறையில் பணி செய்யும் வகையில் காவல்நிலையத்தில் சுமார் 40பேர் பணியில் இருக்க வேண்டிய காவல்நிலையத்தில் தற்போது 10பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதன்காரணமாக மகளிர் காவல்நிலையத்திற்கு வரும் புகார்களை விசாரிப்பது மட்டுமின்றி‌ வழக்கு தொடர்பாக நீதிமன்றம் செல்வது, விசாரணை தொடர்பாக வெளியே செல்வது என அனைத்து பணிகளையும் மேற்கொள்வதில் தடங்கல் ஏற்படுகிறது.

அதேபோல புகார் அளிக்க வரும் பொதுமக்களும் தீர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு பணிசுமை அதிகமாவதால் மன அழுத்தம் ஏற்படும்‌ வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பழனி மகளிர் காவல் நிலையத்திற்கு தேவையான கூடுதல் பெண் காவலர்களை நியமிக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News