சுதந்திரதின ஓட்டம் 2.0: கொடியசைத்து துவக்கி வைத்த திண்டுக்கல் கலெக்டர்

ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவின் சுதந்திரதின ஓட்டம் 2.0 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2021-08-28 05:45 GMT

ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் 2.0 விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நேரு யுவ கேந்திரா இணைந்து ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் 2.0 என்ற விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவின் ஒரு பகுதியாக சுதந்திரதின ஓட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவ் என்பது இந்தியாவின் 75 ஆண்டுகால முற்போக்கான இந்தியா மற்றும் அதன் மக்கள், கலாச்சாரம், சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடுவதை, நினைவுகூறுவதாகும். மத்திய அரசின் முயற்சியாகவும், சுதந்திர போராட்ட வரலாற்றை எடுத்து கூறும் வகையில் இந்நிகழ்ச்சி  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நீதிமன்றம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  முடிவடைந்தது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட துணை ஆட்சியர் தினேஷ்குமார், நேரு யுவகேந்திரா இளைஞர்கள், தேசிய மாணவர் படையினர், கல்லூரி பள்ளி மாணவ மாணவியர் உள்ளிட்ட 150 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News