ஐசிஏஆர் தேர்வு: தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்து திண்டுக்கல் மாணவி சாதனை

ஐ சி ஏ ஆர் தேர்வில் திண்டுக்கல் மாணவி அ.ஓவியா தமிழகத்தில் முதலிடத்தையும் இந்திய அளவில் இரண்டாமிடமும் பிடித்தார்

Update: 2021-11-17 12:30 GMT

அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐ சி ஏ ஆர் தேர்வில் திண்டுக்கல் மாணவி அ.ஓவியா தமிழகத்தில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்

ஐ சி ஏ ஆர் தேர்வில் திண்டுக்கல் மாணவி சாதனை.தமிழகத்தில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐ சி ஏ ஆர் தேர்வில் திண்டுக்கல் மாணவி அ.ஓவியா தமிழகத்தில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்ச்சர் ரிசர்ச் அமைப்பு ஆண்டுதோறும் எம்.வி.எஸ் படிப்புக்காக கால்நடை துறைக்கான அகில இந்திய தேர்வு நடத்துகிறது.

கடந்த செப்டம்பர் 17ல் அகில இந்திய அளவில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திண்டுக்கல் மாணவி அ.ஓவியா தமிழக அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மனைவியை தந்தை மற்றும் தாய் இருவரும் இனிப்புகள் வழங்கி பாராட்டினர். மேலும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவி ஓவியாவிற்கு தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். மேலும், கால்நடைத்துறை பல்கலைக்கழக பேராசிரியர்கள், மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


Tags:    

Similar News