திண்டுக்கல், சிறுமலை விவசாயிகள் குதிரைப் பொங்கல் விழா கொண்டாட்டம்

திண்டுக்கல், சிறுமலையில் விவசாயிகளின் உற்ற நண்பனாய் விளங்கக்கூடிய குதிரைகளுக்கு பொங்கல் விழா எடுத்து கொண்டாடினர்.

Update: 2022-01-16 01:09 GMT

குதிரைப்பொங்கல் கொண்டாடும் விவசாயிகள்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் மாட்டு பொங்கலை முன்னிட்டு குதிரை பொங்கல் விழா நடைபெற்றது. சிறுமலை பகுதிகளில் விளையும் பலா, வாழை, சவ்சவ் ஆகிய விளை பொருட்களை, விளை நிலங்களில் இருந்து கரடுமுரடான பாதைகளில் கொண்டு செல்வதற்காக குதிரைகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பழையூர், புதூர், தென்மலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் வளர்த்து வருகின்றனர்.

ஆண்டு முழுவதும் தங்களுக்கு உற்ற நண்பனாய் இருந்து பொதி சுமக்கும் குதிரைகளுக்கு இன்று குதிரை பொங்கல் வைத்து கொண்டாடினர். இதற்காக குதிரைகளை குளிப்பாட்டி, வண்ண சாயங்களால் பொட்டு வைத்து அலங்காரம் செய்தனர். பின்னர் அவரவர் வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து சூரியனுக்கு தேங்காய், பழம், கரும்பு படையல் வைத்து குதிரைகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஊட்டி குதிரை பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News