துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு எலும்பு முறிவு

திண்டுக்கல் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2022-01-04 04:02 GMT

துப்பாக்கி சூடு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்  மேற்கு மரியநாதபுரம் செட்டிகுளத்தில் ராகேஷ் குமார் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் சம்பவத்திற்கு தொடர்புடைய 3 பேர் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களில் சம்பவத்தில் நேரடி தொடர்புடைய 4 பேர் மருத்துவமனை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் நான்கு பேருக்கும் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய முயன்றபோது தப்பி ஓடிய குற்றவாளிகள் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக கட்டிடத்திலிருந்து கீழே குதித்ததாகவும் அப்போது குற்றவாளிகளுக்கு எலும்புமுறிவு ஏற்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதில் பிரகாஷ்க்கு இடதுகால், மரிய பிரபுவுக்கு வலதுகால் உடைந்துள்ளது. ஜான் சூர்யா என்பவருக்கு இடதுகையும், கணேசமூர்த்தி என்பவருக்கு வலது கையும் உடைந்துள்ளது.

தற்போது முக்கிய குற்றவாளிகள் 4 பேரும் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கை கால் உடைந்த அவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News