தீபாவளி ஸ்பெஷல்: பட்டாசு வடிவில் ஹோம் மேட் சாக்லேட்

திண்டுக்கல்லில் தீபாவளி ஸ்பெஷல் பட்டாசு வடிவில் ஹோம் மேட் சாக்லேட் செய்து அசத்தும் பட்டதாரி பெண்.

Update: 2021-10-31 04:08 GMT

இது பட்டாசு இல்லீங்க! சாக்லேட்

திண்டுக்கல் ஆர் வி நகர் பகுதியைச் சேர்ந்த எம்சிஏ பட்டதாரி புவன சுந்தரி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  குழந்தைகள் அடிக்கடி சாக்லேட் வெளியே வாங்கி சாப்பிட்டு வந்ததை அடுத்து நாமே வீட்டில் சாக்லேட் செய்தால் என்ன என்ற நோக்கில் புவனசுந்தரி விதவிதமாக ஹோம் மேட் சாக்லேட் செய்ய துவங்கினார்.

புவனசுந்தரி தயாரித்த ஹோம் மேட் சாக்லேட் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டதோடு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் இதனை பார்த்து இது போன்று தங்களுக்கும் சாக்லெட் செய்து தரும்படி கேட்டுள்ளனர். அதன்பின் புவன சுந்தரி இதனை வீட்டிலிருந்தே சிறு தொழிலாக செய்ய துவங்கினார். ஹோம் மேட் சாக்லேட்க்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அக்கம்பக்கத்தினர் வெளியூர், வெளிமாநிலங்களிலிருந்து கேட்கும் நபர்களுக்கு சாக்லெட் தயார் செய்து அனுப்பி வருகிறார்.

எப்படி குழந்தைகளுக்கு சாக்லெட் ரொம்ப பிடிக்குமோ அதேபோல் தீபாவளி என்றால் குழந்தைகளுக்கு பட்டாசு பிடிக்கும். குழந்தைகளுக்கு பிடித்தமான பொதுமக்களை கவரும் வகையில் புவனசுந்தரி இந்த தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வடிவங்களில் சாக்லேட்டை செய்யத் துவங்கினார். அந்த வகையில் ஹோம் மேட் சாக்லெட் மூலமாக பல சுவைகளில் புஸ்வாணம், சங்கு சக்கரம், ராக்கெட், துப்பாக்கி, சரவெடி, லட்சுமி வெடி, வெடிகுண்டு போன்ற அசல் பட்டாசு போன்ற வடிவங்களில் சாக்லேட் செய்து அசத்தியுள்ளார்.

வீட்டில் தயாராகும் பட்டாசு போன்ற சாக்லேட்

இதுபோன்ற பட்டாசு சாக்லேட்கள் திண்டுக்கல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு குழந்தைகளும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.  இதோடு மட்டுமில்லாமல் இந்த வகையான தீபாவளி பட்டாசு சாக்லேட் கிப்ட் பேக்காகவும் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர் கிலோ 500 முதல் 700 வரை தரமான ஹோம் மேட் சாக்லேட் வீட்டிலேயே தயார் செய்து விற்பனை செய்து வருகிறார் புவனசுந்தரி.

தன்னுடைய குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட சாக்லேட் தயாரிப்பு இன்று விதவிதமான வகையில் சுவையான பட்டாசு போன்ற சாக்லேட்கள் தயார் செய்து திண்டுக்கல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Tags:    

Similar News