திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: இந்து முன்னணியினர் 30 பேர் கைது

தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்ற போது விநாயகரை போலீசார் கைப்பற்றியதால் பரபரப்பு.

Update: 2021-09-10 08:32 GMT

திண்டுக்கலில் தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்ற இந்து முன்னணியினர்.

திண்டுக்கலில் இந்து முன்னணி சார்பில் தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்ற போது விநாயகரை போலீசார் கைப்பற்றியதால் பரபரப்பு. இந்து முன்னணியினர் 30 பேர் கைது. கொரானா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையிலுள்ள குடை பாறப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இதற்கு பூஜைகள் செய்த இந்து முன்னணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிலையினை ஊர்வலமாக எடுத்து செல்ல முயன்றனர்.

அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் சிலையினை பறிமுதல் செய்து பொதுமக்கள் உதவியுடன் திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் கரைத்தனர். இதனைத் தொடர்ந்து தடையை மீறி சிலை வைத்திருந்ததாக இந்து முன்னணி நிர்வாகிகள் பெண்கள் உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். தடையை மீறி வைத்திருந்த சிலை அகற்றப்பட்டதால் வத்தலகுண்டு சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News