பக்தர்கள் போராட்டத்தால் 4 ரத வீதிகளிலும் வலம் வந்த கோட்டை மாரியம்மன் பூத்தேர்

பக்தர்கள் இந்து அமைப்புகளின் போராட்டம் காரணமாக நான்கு ரத வீதிகளிலும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் பூத்தேர் வலம் வந்தது

Update: 2022-01-28 10:37 GMT

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர் ஊர்வலம் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக நான்கு ரத வீதிகளில் வீதி உலா சென்றது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரானா பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்கு வழிபாட்டுத் தலங்களை மூட உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே நேற்று இரவு தமிழக அரசு வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல்வேறு தன் தளர்வுகளை அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையான இன்று முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் பூத்தேர் ஊர்வலம் நடைபெற்றது.பூத் தேரினை ரதவீதிகளில் கொண்டு செல்ல போலீசார் முதலில் அனுமதிக்கவில்லை.பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கோவில் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பூத்தேர் ஊர்வலத்தினை நான்கு ரத வீதிகளில் நடத்திக்கொள்ள அனுமதி அளித்தது.இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி கோகுல கிருஷ்ணன் தலைமையில் போலீசார் தேரினை நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News