ரூ.43 லட்சம் நூதன மோசடி: திண்டுக்கல்லில் போலி வக்கீலுக்கு "காப்பு"!

திண்டுக்கல்லில் ரூ.43 லட்சம் மோசடி செய்ய புகாரில், போலி வக்கீல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2021-04-23 13:45 GMT

திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்தவர், கார்த்திக். இவர், தன்னை வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு, திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்த உதவி தலைமை ஆசிரியரின் மகனை, குற்ற வழக்கில் இருந்து விடுவிப்பதாகக்கூறி, ரூ.43 லட்சம் நூதன மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .

இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தியதில், கார்த்திக் போலி வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. இதற்கிடையே போலீசாருக்கு பயந்து கார்த்திக் தற்கொலைக்கு முயன்றதால்,  திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கார்த்திக்கை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News