திண்டுக்கல் அமமுக வேட்பாளர் குக்கர் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார்

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் அமமுக வேட்பாளராக போட்டியிடும் ராமுத்தேவர் நேற்று குக்கர் சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2021-03-25 23:00 GMT

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அம்மா முன்னேற்றக் கழக வேட்பாளர் இராமுத்தேவர் நேற்று காலை கோவிந்தாபுரம், நாயக்கர் புதுத்தெரு, காளிமுத்து பிள்ளை சந்து உள்ளிட்ட பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

முன்னதாக கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

மேலும் வாக்கு சேகரிக்க வந்த தொண்டர்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார். பாரதிபுரம் பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலில் சாய்பாபாவுக்கு தனது கைகளால் தீபாராதனை செய்து துண்டு பிரசுரத்தை சாய்பாபா விக்கிரகத்தின் பாதங்களில் வைத்து வழிபாடு செய்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அவைத்தலைவர் சவரிமுத்து, வடக்குப்பகுதி செயலாளர் ஒ.ஜே.பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்


Tags:    

Similar News