திண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் கால மீட்பு ஒத்திகை

திண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படையினர் பேரிடர் கால மீட்பு ஒத்திகையை நடத்தினர்.

Update: 2021-07-20 01:07 GMT

திண்டுக்கல் கோட்டை குளத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகையில் தீயணைப்புத்துறையினர்.

திண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்புத்துறையினர் ஒத்திகை 

திண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படையினர் ஒத்திகை நடத்தினர். இந்த ஒத்திகையை மாவட்ட கலெக்டர் விசாகன் துவக்கி வைத்தார்.

இதில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளங்களிலிருந்து சமாளிப்பது,  சிக்கியவர்களை காப்பாற்றுவது, மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழும்போது உயிர்களை காப்பாற்றுவது, மின் சாதனங்களால் ஏற்படும் ஆபத்துக்கள், இடி மின்னலில் இருந்து தப்பிப்பது உட்பட பல தகவல்களை செய்முறை மூலம் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர். இந்த ஒத்திகையை செய்துகாட்டிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

இதில், டிஆர்ஓ கோவிந்தராஜு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ரமணன் உதவி தீயணைப்பு அலுவலர் சுரேஷ் கண்ணா நிலைய அலுவலர் சக்திவேல் மயில்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News