மது வாங்க குவியும் வெளி மாவட்டத்தினர் 5 பேர் கைது,:1,150 பாட்டில்கள் பறிமுதல்

மது பாட்டில்கள் வாங்க திண்டுக்கல்லில் குவிlந்த வெளி மாவட்டத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் வைத்திருந்த 1,150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-06-24 16:38 GMT

திண்டுக்கல்லில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

திண்டுக்கல்:

மது பாட்டில்கள் வாங்க திண்டுக்கல்லில் குவிlந்த வெளி மாவட்டத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் வைத்திருந்த 1,150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து மே மாதம் முதல் ஊரடங்கை அரசு அறிவித்தது. தற்போது கொரோனா பாதிப்பு பல்வேறு பகுதிகளில் கொரோனா குறைந்து வருகிறது. இதனை அடுத்து பாதிப்புக்கு ஏற்ப தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது . பாதிப்பு அதிகமுள்ள கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் முகாமிட்டு மதுபாட்டில்களை வாங்கிச் சென்று அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. ரவளி பிரியா திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, திண்டுக்கல் ஆர்.எம் காலனி 8 வது கிராஸ் பகுதியில் திண்டுக்கல் நகர் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் நடத்திய வாகன சோதனையில், அந்த வழியாக வந்த டாடா இண்டிகா காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மதுபாட்டில்கள் கடத்தி சென்ற கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகர் (60), முருகன் (55), மணிகண்டன் (29) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 150 மதுபாட்டில்கள், காரையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், இ.பி காலனி பிரிவில் தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில், அந்த வழியாக வந்த பயணிகள் வேனை மறித்து சோதனை செய்தனர். அப்போது மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேர்ந்த மோகன் (26), ஜோதி ஹரிஹரன் (25) ஆகிய இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 1,000 மதுபாட்டில்கள் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.

வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மதுபானங்களை வாங்க திண்டுக்கல்லில் படை எடுத்து வருவதால், மாவட்ட எல்லைகளில் வாகன சோதனைகளை அதிகப்படுத்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News