விநாயகர் சதுர்த்தி, தொடர் முகூர்த்த நாள்: பூக்களின் விலை பலமடங்கு உயர்வு

விநாயகர்சதுர்த்தி-முகூர்த்த நாளையொட்டி திண்டுக்கல் மாநகராட்சி அண்ணா மலர் அங்காடியில் பூக்கள்விலை பலமடங்கு உயர்ந்துள்ளது

Update: 2021-09-09 10:29 GMT

திண்டுக்கல் மலர்அங்காடியில் குவிந்த விவசாயிகள், வியாபாரிகள்

 விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்த நாள்கள் வருவதால் திண்டுக்கலில்  பூக்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அத்துடன்,  தொடர்ந்து சுபமுகூர்த்த நாள்கள் வருவதாலும் திண்டுக்கல் மாநகராட்சி அண்ணா மலர் அங்காடியில்  பூக்கள் விலை பலமடங்கு உயர்ந்து காணப்படுகிறது.

வெள்ளோடு, பஞ்சம் பட்டி, சின்னாளபட்டி, சிறுநாயக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளையும் பூக்கள் திண்டுக்கல் மாநகராட்சி பூ மார்கெட்டில் சந்தைபடுத்தப்பட்டு விற்பனை கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரத்தில் மிகவும் மந்தமாக இருந்த பூக்கள் விலை இன்று அதிகரித்து உள்ளது அதன்படி மல்லிகை பூ - 1000 முதல் 1300 வரை விற்பனையாகிறது.

முல்லை பூ - 700 .

கனகாம்பரம் - 2000 முதல் 2200 வரை.

ஜாதிப் பூ - 600/700.

செவ்வந்தி - 80/100/150.

சம்பங்கி - 350/400.

அரளி - 250.

கோழி கொண்டை - 70.

செண்டு மல்லி - 20/30.

ரோஸ் - 100/120 வரை பூக்கள் விலை போவதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News