பள்ளி மாணவிக்கு டாக்டர் பட்டம்

திண்டுக்கல் பள்ளி மாணவி மு.விதுலாஸ்ரீ க்கு சாதனை படைத்ததற்கான டாக்டர் பட்டத்தை சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் வழங்கியது.

Update: 2021-04-26 07:22 GMT

மாணவி மு.விதுலாஸ்ரீக்கு சாதனை படைத்ததற்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி மு.விதுலாஸ்ரீ முருகேசன்.

இவர் ரோல் பால் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், பெல்காமில் 309 பேர் பங்குபெற்ற போட்டியில் வெற்றிபெற்று உலக கின்னஸில் இடம் பிடித்தார். மேலும்  தேசிய அளவில் வெள்ளிப் பதக்கங்களையும், வெண்கலப் பதக்கமும் பெற்றார். தென்னிந்திய அளவில் தங்கப்பதக்கமும் வென்றார். 

மாணவிவின் இந்த சாதனையை  பாராட்டி சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம், மதுரையில் (doctorate of record-breaking) சாதனை படைத்ததற்கான டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

தன்னுடைய இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் பெற்ற டாக்டர் பட்டம் மற்றும் பதக்கத்தினை எஸ்.எம்.பி.எம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் முன்னிலையில் காண்பித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.

Tags:    

Similar News