குற்றவாளிகளை எச்சரித்த திண்டுக்கல் தாலுகா புதிய காவல் ஆய்வாளர்

இனி குற்றங்களில் ஈடுபடக்கூடாது என குற்றவாளிகளுக்கு திண்டுக்கல் தாலுகா புதிய காவல் ஆய்வாளர் அறிவுரையுடன் கூடிய எச்சரிக்கை விடுத்தார்

Update: 2022-01-19 14:45 GMT

குற்றவாளிகளுக்கு அறிவுரையுடன் கூடிய எச்சரிக்கை விடுத்த காவல் ஆய்வாளர்

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அறிவுறுத்தலின்படி, டிஎஸ்பி.முருகன் மேற்பார்வையில் தாலுகா, தாடிக்கொம்பு ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட-25-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை அழைத்து திண்டுக்கல் தாலூகா காவல் ஆய்வாளர் சேது பாலாண்டி, சார்பு ஆய்வாளர்கள் விஜய் ஜெய்கணேஷ் மற்றும் காவலர்கள் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை வழங்கினார்கள்

இதில் ஆய்வாளர் சேதுபாலாண்டி தெரிவிக்கும்போது, நான் இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருக்கும் வரையிலும் அதற்கு பின்பும் அரிவாள், கத்தி, கஞ்சா, போதை ஆகிய கலாச்சாரங்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது,

குடும்பத்துடன் அரவணைத்து சென்றால் தவறு செய்யும் எண்ணம் வராது. உங்களுடைய வாழ்வாதாரத்திற்கு நேர்மையான எந்த வகையான உதவியாக இருந்தாலும் கேட்டால் உடனடியாக செய்து தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்த்து விடுவதாகவும் கூறினார்.

குற்றவாளிகளுக்கு பின்புலம் யாராக இருந்தாலும் அவர்களையும் வழக்கில் சேர்ப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார். இனிமேல் சிறு குற்றவழக்குகளில் கூட ஈடுபடக் கூடாது. இனிமேல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிங்கம் பட பாணியில் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை கூறினார்.

தாலுகா காவல் நிலையத்தில் பணிக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் 10-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்திருக்கிறார். இதுபோன்று கடுமையான நடவடிக்கை தொடர்ந்தால் தாலுகா மற்றும் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் பயப்படுவார்கள்.

மேலும் ஆய்வாளர் யாருக்காகவும் சாட்டையை சுழற்றுவதை நிறுத்தக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News