திண்டுக்கல்லில் நடமாடும் வாகனத்தில் காய்கறி விற்பனை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கிவைத்தார்

திண்டுக்கல் மாவட்டத்தில் நடமாடும் வாகனத்தில் காய்கறி விற்பனையை அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கிவைத்தார்.

Update: 2021-05-24 08:51 GMT

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பாக மொத்தம் 233 வாகனங்களில் காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது கூட்டுறவுத் துறை சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி இன்று தொடங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது...

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குறைந்த விலையில் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை மக்களின் வசிப்பிடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக 233 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தேவைப்படும் பட்சத்தில் கூடுதலான வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் நலனில் அக்கறை உள்ள முதல்வராக தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளார் அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி செல்லும் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது

விலைவாசியை உயர்த்தாமல் கட்டுக்குள் இந்த அரசு வைத்துள்ளது எனவேதான் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் விலைக்கே விற்பனை செய்ய வணிகர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது, கூடுதல் படுக்கை வசதிகள் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது ,

அக்சிஜன் முன்பு தட்டுப்பாடு இருந்தது அந்த நிலை தற்போது இல்லை ஆக்ஸிஜன் பெறப்பட்டு தற்போது தட்டுப்பாடு இல்லாமல் அனைவருக்கும் ஆக்சிசன் கிடைத்து விடுகிறது என்று தெரிவித்தார்

Tags:    

Similar News