தொடர் முகூர்த்தம்: திண்டுக்கல் பூ மார்க்கெட் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

தொடர் முகூர்த்தம் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Update: 2021-06-13 12:17 GMT

திண்டுக்கல் பூ மார்க்கெட்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ஊரடங்கு படிப்படியாக தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது அதன்படி அத்தியாவசியப் பொருட்களான காய்கறி.மளிகை பொருட்கள் பூச்சந்தை உட்பட அனைத்தும் திறக்கலாம் என அறிவித்தது.

இந்நிலையில் தொடர் முகூர்த்தம் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகளவில் உயர்ந்தது. மல்லிகைப்பூ ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், கனகாம்பரம் 400 ரூபாய்க்கும், முல்லைப் பூ 100 ரூபாய்க்கும், ரோஜா பூ 100 ரூபாய்க்கும், அரளிப்பூ 80 ரூபாய்க்கும், செண்டுமல்லி 80 ரூபாய்க்கும் என பூக்கள் அனைத்தும் விலை அதிகமாக இருந்தது.

இதுகுறித்து பூச்சந்தை வியாபாரி கூறும்போது, வைரஸ் தொற்று காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதன் காரணமாக பூ விவசாயிகள் பூ வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது பூச்சந்தை திறக்கப்பட்டுள்ளன. தொடர் முகூர்த்தம் காரணமாக இன்று பூக்கள் விலை அனைத்தும் உயர்ந்துள்ளது இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று கூறினார்.

Tags:    

Similar News