விநாயகர் சிலை ஊர்வலம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதிகோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

Update: 2021-09-06 10:16 GMT

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் கோவில் குளங்கள், வீதிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு அனுமதிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா பேசியதாவது:

அனைத்து விழாக்களும் பிற மதத்தினர் கொண்டாடுவதற்கு அனுமதி வழங்குகிறார்கள். ஆனால் இந்து மத விழாவின் முக்கிய விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா உள்ளது. இந்த விழாவுக்கு ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இது இந்து மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாக கருதுகிறோம்.

கோவில்களை திறந்தால் தான் மக்கள் மனநிலை நன்றாக இருக்கும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை நடத்தினால் மட்டும் தான் மதநல்லிணக்கம் வளரும். மாநில அரசு இதற்கு அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இந்து மக்கள் கட்சி தொடர் போராட்டங்கள் நடத்தும். தடையை மீறுவும் தயங்கமாட்டோம். இவ்வாறு பேசினார்.

Tags:    

Similar News