மாநில அரசை கண்டித்து பாஜக நாளை ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மாநில அரசை கண்டித்து பாஜக நாளை முதல் தொடர் போராட்டம் நடத்தும் என அறிவித்துள்ளது

Update: 2021-11-21 13:02 GMT

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த பாஜகவினர்

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில துணைத்தலைவர் கனகசபாபதி கூறினார்.

திண்டுக்கல் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்காக திண்டுக்கல் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சி தேர்தலுக்காக விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது.

மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்ட தலைவர் தனபால் மனுக்களை பெற்றுக் கொண்டனர். பின்னர் மாவட்ட துணைத்தலைவர் கனகசபாபதி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:

வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் விருப்ப மனுக்களை கட்சியினரிடம் பெற்றுக் கொண்டுள்ளோம். இதனை மேலிடத்திற்கு அனுப்பி யாருக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

மத்திய பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைத்துள்ளது. அதனால் இந்தியாவில் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைத்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் விலை குறைக்கவில்லை. அதனை கண்டித்து நாளை பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்ததை எதையும் நிறைவேற்றவில்லை. சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைக்கப்படும் என்றார்கள் குறைக்கவில்லை. ரேஷன் கார்டுகளுக்கு 4000 ரூபாய் தரப்படும் என்றார்கள், தரவில்லை. கர்நாடகாவில் பெட்ரோலுக்கு 13 ரூபாய் குறைந்துள்ளது. டீசலுக்கு 19 ரூபாய் குறைந்துள்ளது. புதுச்சேரியில் பெட்ரோலுக்கு 11 ரூபாய் குறைந்துள்ளது டீசலுக்கு 13 ரூபாய் குறைந்துள்ளது.

காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் மிக அதிக அளவு பெட்ரோல் விலை குறைந்துள்ளது. ஆனால் தமிழக நிதியமைச்சர் புது விளக்கம் தருகிறார். இது மக்கள் விரோத அரசாக இருக்கிறது. இதை கண்டித்து நாளை முதல் தொடர் போராட்டம் நடைபெறும், என்றார்.

Tags:    

Similar News