நீரில் மூழ்கி மாணவர்கள் சாவு: ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் காப்பாற்ற முயற்சி

நீரில் மூழ்கிய மாணவர்களை இருசக்கர வாகனத்தில் தூக்கி சென்று காப்பாற்ற முயற்சித்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-16 12:03 GMT

நீரில் மூழ்கிய மாணவர்களை பைக்கில் தூக்கிச் சென்று காப்பாற்ற முயன்ற இளைஞர்கள்.

திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் ஹரிஷ் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே ஊரைச் சேர்ந்த வில்லியம் மகன் ரிச்சர்ட் இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஹரிஷ் மற்றும் ரிச்சர்ட் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள், லாக்டவுன் என்பதால் நண்பர்கள் இருவரும் ரெட்டியப்பட்டி அருகே உள்ள சாலை குளத்தில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். நண்பர்கள் இரண்டு பேருக்கும் நீச்சல் தெரியாது.

இந்நிலையில் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஹரிஷ் தவறி குளத்தில் விழுந்துள்ளார். அவனைக் காப்பாற்றச் சென்ற ரிசர்டும் குளத்தில் குதித்துள்ளார்.

இரண்டு பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் சத்தம் போட்டுள்ளனர். சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் மாணவர்கள் இரண்டு பேரையும் மீட்டுள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால், மாணவர்கள் இருவரையும் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இளைஞர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், மாணவர்கள் இருவரையும் பரிசோதனை செய்தபோது வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ரெட்டியபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News