கள்ளச்சாராயம்- போதை மருந்து விழிப்புணர்வு கலைப் பயணம்:ஆட்சியர் தொடக்கம்

கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது

Update: 2021-10-21 00:30 GMT

திண்டுக்கல்லில் கள்ளச்சாராயம் மற்றும் போதை மருந்து குறித்த விழிப்புணர்வு கலைப் பயணத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் தொடங்கி வைத்தார்

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை மருந்து குறித்த விழிப்புணர்வு கலை பயணத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் தொடங்கி வைத்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கலந்துகொண்டு பேசியதாவது: கள்ளச்சாராயம் மற்றும் போதை மருந்து பழக்கத்தால் ஏற்படும் சமுதாய பிரச்னைகளான கணவன் மனைவி சண்டை, சச்சரவுகள், விவாகரத்து பிரச்னைகள், பொருளாதாரப் பிரச்னைகள், மரியாதை குறைவு, உடல்நல பிரச்னைகள், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, கல்லீரல் புற்று நோய், கணையத்தில் வீக்கம், தொண்டை உணவுக்குழாய் மற்றும் உடல் சத்து குறைபாடு, சர்க்கரை வியாதி இருதய வீக்கம், கை கால் செயலிழத்தல், நரம்புத்தளர்ச்சி, கருச்சிதைவு ,ரத்தசோகை ,ஆண்மை இழப்பு, மன ரீதியான பிரச்சனைகள், தூக்கமின்மை, மனச்சோர்வு, பதற்றம், தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி, ஞாபக மறதி உள்ளிட்ட விளைவுகள் ஏற்படும் என்றார் அவர்.

கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் கள்ளச்சாராயம் மற்றும் போதை மருந்து பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கலை பயணமானது நகரின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News