திண்டுக்கல்லில் காெராேனா விழிப்புணர்வு மினி மாரத்தான்: ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

கோவிட்-19 மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் திண்டுக்கல்லில் நடைபெற்றது.2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்ப்பு.

Update: 2021-11-22 01:21 GMT

திண்டுக்கல்லில் கோவிட்-19 மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது.

கோவிட்-19 மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் திண்டுக்கல்லில் நடைபெற்றது. 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்பு.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் கழக மாவட்ட தடகள சங்கம், மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் முன்பாக போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கலந்து கொண்டு ஓடினார்.

ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக ஓட்டம் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கு ரவுண்ட்ரோடு தடகள சங்கத்திலிருந்து, எஸ்பி முகாம் அலுவலகம், நாகல் நகர், திப்பு சுல்தான் மணிமண்டபம், யானை தெப்பம், கிழக்கு மற்றும் மேற்கு ரத வீதிகள், தாடிக்கொம்பு ரோடு வழியாக 10.5 கிலோ மீட்டர் தூரம் கடந்து மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவுற்றது.

பெண்களுக்கு ரவுண்ட் ரோடு தொடங்கி சிலுவத்தூர் ரோடு, யாதவமேட்டு ராஜக்காபட்டி, திருச்சி ரோடு எம் .வி. எம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, தாடிக்கொம்பு ரோடு வழியாக ஐந்து கிலோமீட்டர் தூரம் கடந்து மாவட்ட விளையாட்டு அரங்கம் அடைந்தனர். திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர்,ஈரோடு , ஒசூர், சென்னை உள்ளிட்ட தமிழகம் பெங்களுர் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பள்ளி ,கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கான போட்டியில் சிறுமி ஒருவர் ஓடும் பொழுது பாதியில் ஓட முடியாமல் நின்று விட்டார். அவரின் மன உறுதியையும், விடா முயற்சியையும் அறிந்த சக மாணவி ஒருவர் மகிழ்ச்சியாக தனது தோளில் தூக்கிச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கான போட்டியில், முதலிடம் வென்ற மதுரையைச் சேர்ந்த கவிதா என்ற மாணவிக்கு ரொக்கம் ரூபாய் 10,000, மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. அதேபோல் ஆண்களுக்கான போட்டியில் முதலிடம் பெற்ற ஓசூரை சேர்ந்த நெஞ்சுண்டான் என்ற மாணவனுக்கு ரொக்கம் ரூபாய் 15,000 மற்றும் சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு முதல் பத்து இடம் பிடித்தவர்களுக்கு ரொக்கம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், கோட்டாட்சியர் லதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, ஜி.டி.என் கலைக்கல்லூரி தாளாளர் ரெத்தினம், மேற்கு ரோட்டரி சங்க தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News