பெட்ரோல், டீசல் விலை - திண்டுக்கல்லில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையில் வாட் வரியை குறைக்காத மாநில அரசைக் கண்டித்து, திண்டுக்கல்லில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-11-30 00:00 GMT

பெட்ரோல், டீசல் விலையில் வாட் வரியை குறைக்காத மாநில அரசைக் கண்டித்து,  பாரதிய ஜனதா கட்சியின் வர்த்தகப் பிரிவினர், திண்டுக்கல்லில்  ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயுலின் முன்புறம்,  100 -க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட வரித்தக பிரிவினர்,   பெட்ரோல் டீசல் விலையுயர்வை கண்டித்து, நேற்று  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையில் தமிழக அரசு வாட் வரியை குறைத்தாலே விலையுயர்வை கட்டுப்படுத்த முடியும் எனக்கூறி கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும்,  பெண்களுக்கு 1000 ரூபாய் மாதம் தருவது உள்ளிட்ட தேர்தல் வாக்குருதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் இருந்து வர்த்தக பிரிவு பஜகவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News