கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் மற்றும் ஐயப்பன் கோவில்களில், பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

Update: 2021-11-17 01:30 GMT

திண்டுக்கல் கோவில் ஒன்றில் மாலை அணிந்து கொண்ட பக்தர்கள்.

கார்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள்,  ஒரு மண்டலம் விரதம் இருந்து மண்டல பூஜைக்கு செல்வது வழக்கம்.  அவ்வகையில், திண்டுக்கல்லில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். திண்டுக்கல்  மலையடிவாரம் வட்டார ஐயப்பன் கோவிலில், இன்று  அதிகாலையில் கொடியேற்றம், கணபதி பூஜையுடன் துவங்கியது.

இதனை தொடர்ந்து, திண்டுக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர்,  மாலை அணிந்து கொண்டு தங்கள் விரதத்தை துவங்கினர். எனினும், சபரிமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, மாலை அணிந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை, இன்று மிகவும் குறைவாக காணப்பட்டது.

சபரிமலையில்,  60 வயதிற்கு மேல் உள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால்,  அங்கு செல்ல முடியாத பக்தர்கள்,  திண்டுக்கல் மலைக்கோட்டை ஐயப்பன் திருக்கோவிலில் விரதத்தை பூர்த்தி செய்து,  நெய் அபிஷேகம் செய்து கொள்ள,  கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News