அதிமுக ஆட்சியில் சிறப்பான திட்டங்கள்- அமைச்சர் சீனிவாசன்

Update: 2021-03-27 11:15 GMT

மக்களுக்கான திட்டங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து செயல்படுத்துபவர் முதல்வர், சிறப்பான திட்டங்களை அவர் தந்துள்ளார் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நத்தர்ஷா தெரு, வேடபட்டி, ராஜலெட்சுமி நகர், பாதாள காளியம்மன் கோவில் தெரு, சவுடம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை அமைச்சரும், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில்:-

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகள் மற்றும் ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையை முற்றிலும் மாற்றி தினந்தோறும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்ற அவர் அதிமுக செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டார். மக்களுக்கு சிறப்பான திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார் என பேசினார்.

பிரச்சாரத்தின் போது மாநில அதிமுக அமைப்பு செயலாளர் மருதராஜ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், துணை தலைவர் ராஜன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் பிரேம், மாவட்ட பேரவை இணை செயலாளர் சோனா சுருளிவேல், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News