திண்டுக்கல் மாநகராட்சியில் தடையில்லா சான்றிதழ் பெற அதிமுக வேட்பாளர்கள் ஆர்வம்

நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, திண்டுக்கல் மாநகராட்சியில் தடையில்லா சான்றிதழ் பெற அதிமுக வேட்பாளர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

Update: 2022-01-27 13:23 GMT

மாநகராட்சி அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு ஆர்வத்துடன் படிவம் பெற்று செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நாளை முதல் வேட்புமனு துவங்க உள்ள நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி உட்பட்ட 48 வார்டு பகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளிக்கப்பட்டவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் வீட்டு வரி மற்றும் குழாய் வழி நிலுவை தொகையினை செலுத்தி முடிந்ததற்கான தடையில்லா சான்று விண்ணப்ப படிவத்தை ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர்.

இதேபோல் அங்கீகரிக்கப்பட்ட பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு ஆர்வத்துடன் படிவம் பெற்று செல்கின்றனர்.

இதனையடுத்து திண்டுக்கல் மாநகராட்சி தேர்தல் தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

Tags:    

Similar News