முதல் தவணை 2.75 லட்சம் பேரும் 2-வது தவணை 6 லட்சம் பேரும் தடுப்பூசி போடவில்லை

தவணை காலம் கடந்தும் தடுப்பூசி செலுத்தாத 17 ஆயிரம் பேரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவதற்கு 90 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-12-05 03:00 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் 2.75 லட்சம் பேர் முதல் தவணையும், 6 லட்சம் பேர் 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தவணை காலம் முடிந்தும் 2-வது தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 14½ லட்சம் பேர் முதல் தவணையும், 8 லட்சம் பேர் 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

ஆனால் 2¾ லட்சம் பேர் முதல் தவணையும், 6 லட்சம் பேர் 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்தவில்லை. இதில் பலருக்கு முதல் தவணை காலம் முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் அலட்சியமாக உள்ளனர்.இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், போதிய விழிப்புணர்வு மக்களிடம்  ஏற்படவில்லை.

திண்டுக்கல் மாநகராட்சியில் 2-வது தவணை காலம் முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாத 17 ஆயிரம் பேரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவதற்கு 90 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை  தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளதாகவும், இதேபோல் முதல் தவணை தடுப்பூசியை கூட செலுத்தாத மாநகராட்சி பகுதியில் 7 ஆயிரம் பேரை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெறுவதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News