ஒட்டன்சத்திரத்தில் 24 மணிநேரமும் செயல்படும் ஒயின் ஷாப்: தமிழ்நாடு தேவர் பேரவை

ஒட்டன்சத்திரத்தில் ஆளும் கட்சியினரின் துணையுடன் 24 மணிநேரமும் ஒயின் ஷாப், பார்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டு.

Update: 2021-08-28 14:40 GMT

தமிழ்நாடு தேவர் பேரவையின் மாநில துணைத் தலைவர் ஈஸ்வரன் திண்டுக்கல்லில் பேட்டி.

திண்டுக்கல்லில் தமிழ்நாடு தேவர் பேரவையின் மாநில துணைத் தலைவர் ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒட்டன்சத்திரம் பகுதியில் சூதாட்டம் தலை விரித்து ஆடுகிறது. காவல்துறையிடம் புகார் தெரிவித்தால் புகார் தெரிவித்தார்கள் மீதே வழக்குகளை பதிவு செய்கின்றனர். பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒயின் ஷாப்புகளில் 24 மணி நேரமும் பார்கள் செயல்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியினரின் துணையுடன் செயல்படுவதால் காவல்துறையினர் கண்டு கொள்வது கிடையாது.

திமுகவினர் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்துகொண்டு 24 மணி நேரமும் உறங்காத குடிகார நகரமாக ஒட்டன்சத்திரம் விளங்குகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பாருக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களும் மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர். சென்ற வாரம் காந்திநகர் பகுதியில் மது அருந்திய நிலையில் ஒரு பெண் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கி உள்ள முக்குலத்து இன மக்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு அரசு வழங்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்கவேண்டும். ஒட்டன்சத்திரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். பேட்டியின்போது தமிழ்நாடு தேவர் பேரவை மாவட்ட அமைப்பாளர் செல்லத்துரை, ஒட்டன்சத்திரம் நகர இளைஞரணி தலைவர் புவனேஸ்வரன் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News