சீனாவின் புதிய டெல்டா வகை வைரஸ் பரவல் மேலும் மோசமடையும்

சீனாவில் தற்போதைய கொரோனா வைரஸ் டெல்டா மாறுபாட்டால் ஏற்பட்டுள்ளது எனவும், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-25 05:07 GMT

சீனாவின் புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் வரும் நாட்களில் அதிகரிக்கும் மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சீனாவில் தற்போதைய பரவல் வெளிநாடுகளில் இருந்து வரும் டெல்டா மாறுபாட்டால் ஏற்படுகிறது என்று தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரி வு லியான்ஜியோ கூறினார்.

அக்டோபர் 17 முதல் பரவத்தொடங்கிய தொற்று அலை 11 மாகாணங்களுக்கு பரவியது. கன்சு மாகாணங்களில் வைரஸ் பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் காரணமாக அக்டோபர் 31ஆம் தேதி திட்டமிடப்பட்ட மராத்தானை ரத்து செய்துள்ளது. நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்ட நகரங்களில் உள்ள மக்கள் தற்போது தலைநகருக்கு வருவதற்கோ அல்லது திரும்புவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News