செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

சோழவரம் அருகே செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.;

Update: 2023-02-28 03:30 GMT

குடிபோதையில் தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி சோழவரம் அடுத்த ஆத்தூர் வீ.ஜி.மேடு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான அஜீத். நேற்று மாலை மது போதையில் திடீரென அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து கூச்சலிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கிராம இளைஞர்களே துரிதமாக செல்போன் டவரில் ஏறி குடிபோதையில் இருந்த அஜீத்தை இருக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனை மறுத்து அஜித் தனக்கு குடும்பத்தில் பிரச்சனை இருப்பதாக அதனால் தான் செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போகப் போகிறேன் என்று தெரிவித்தார்.

இதில் கிராம மக்கள் அவனிடம் நல்ல முறையில் பேச்சு கொடுத்துக் கொண்டே பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர். விசாரணையில் குடும்ப தகராறு காரணமாகவே செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. மது போதையில் இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News