ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 450 கிலோ கஞ்சா பறிமுதல் -இருவர் கைது
செங்குன்றம் அருகே ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 450 கிலோ கஞ்சா பறிமுதல். இருவர் கைது.;
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்களை தீவிர சோதனை நடத்தினர். அப்போது சிறிய சரக்கு வாகனம் ஒன்றில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திராவிலிருந்து சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட சுமார் 450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவற்றை கடத்தி வந்த இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் இருந்து கஞ்சாவை அனுப்பியது யார், எங்கு கொண்டு செல்லப்படுகிறது, யாருக்கெல்லாம் தொடர்பு என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.