அலமாதி பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி..!

அலமாதி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சியில் பல படைப்புகளை செய்து அசத்தினர்.

Update: 2024-08-11 06:00 GMT

மாணவர்களின் அறிவியல் கண்காட்சி 

செங்குன்றம் அருகே பழைய அலமாதி அரசு உயர்நிலை பள்ளி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் செங்குன்றம் அடுத்த பழைய அலமாதி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அறிவியல் கணிதம், விளையாட்டுகள்,சார்ந்த படைப்புகளான சூரிய ஒளியில் வாகனங்கள் இயக்கப்படுவது, பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களால், சுற்றுச்சூழலை பாதுகாக்கப்படும் என மாணவர்கள் படைப்புகள் மூலம் தெரிவித்தனர்.


பின்னர் பல்வேறு படைப்புகளை மாணவர்கள் காட்சி பொருளாக வைத்தனர். இந்த கண்காட்சியை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை நேரடியாக சென்று மாணவர்களிடம் படைப்புகள் குறித்து கேட்டு அறிந்தனர். அதற்கு மாணவர்கள் படைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் மாணவர்கள் தெளிவாக அழகாக எடுத்துக் கூறினர்.

அரசு பள்ளியில் இது போன்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது, பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.. மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி ஊக்கப்படுத்துவதே ஆசிரியர்களின் கடமை என்றும், தற்போது செயல்பட்டு வரும் அரசானது கல்வித்துறைக்கு முக்கியத்துவம் வழங்கி தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் வசதிகளும் செய்து தருகிறது. 


தற்போது அரசு பள்ளிகளில் இருக்கும் வசதிகளை பார்த்து சில பெற்றோர்கள் தாங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வருவதாகவும், குழந்தையை ஒரு தாய் எப்படி பேணி காப்பாளோ அதே போல் தாய் உள்ளத்தோடு நம் முதல்வர் ஏழை மாணவர்கள் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தி எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷா தெரிவித்தார். 

Tags:    

Similar News