செங்குன்றம் அருகே கால்பந்து போட்டி..!
செங்குன்றம் அருகே விளங்காடுப்பாக்கம் கிராமத்தில் ஒரு நாள் கால்பந்து போட்டி நடைபெற்றது.;
செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் மல்லிமா நகரில் ஒருநாள் கால்பந்தாட்ட போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் விளாங்காடுப்பாக்கம் தர்காஸ் மல்லி மாநகரில் டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு குழுவினரின் சார்பில் மறைந்த கே.ஆம்ஸ்ட்ராங் நினைவு கோப்பை ஒரு நாள் எழுவர் கால்பந்தாட்ட போட்டி புழல் ஒன்றிய கழக திமுக செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன் மற்றும் விளாங்காடு பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணிதிருமால், தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாடேவிட்சன் மற்றும் தொழிலதிபர் இ.தமிழரசு விளங்காடுப்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கலாவதி நந்தகுமார், சென்னை வடகிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் மல்லி ஆர். ராஜா, முன்னாள் வார்டு உறுப்பினர் எஸ்.ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில்16 அணிகள் கலந்துகொண்டுவிளையாடினர். இப்போட்டியில் முதல் பரிசை வென்ற விளங்காடு பக்கம் எழிலன் செலக்ட் அணியினருக்கு ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பரிசையும், கேகே கிராண்ட்லைன் செலக்ட் அணியினருக்கு 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினையும் ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன் வழங்கினார்.
இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர் மாரியம்மாள் நரசிம்மன், முன்னாள் நிர்வாகிகள் எம்.விஸ்வநாதன், எஸ்.கேது, வி.சந்திரன், அருள்தாஸ், அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை விளாங்காடுபாக்கம் ஊராட்சி மல்லிமா நகர் டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு குழு நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.