கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு..!
செங்குன்றம் அருகே விளாங்காடு பக்கத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் கால்பந்தாட்டப் போட்டி.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் உள்ள விளையாட்டு திடலில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 19 வயது உட்பட்டவர்களுக்கான ஒரு நாள் எழுவர் கால்பந்தாட்டப் போட்டி சேலஞ்சிங் ஃபுட்பால் அகாடமி உதயநிதி ஏற்பாட்டில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன், விளாங்காடு பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிசரவணன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
16 அணிகள் கலந்து கொண்டு விளையாடிய இப்போட்டியில் முதல் பரிசை வென்ற விளாங்காடுபாக்கம் அஜி செலக்ட் விளையாட்டுக் குழுவினர் ரூபாய் 10 ஆயிரம் ரொக்கப் பரிசையும், கோப்பையையும், சேலஞ்சிங் ஃபுட்பால் அகாடமி பி அணியினருக்கு8 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினையும் கோப்பையையும், சேலஞ்சிங் ஃபுட்பால் அகாடமி ஏ அணியினருக்கு கோப்பையையும் வழங்கினர்.
இதில் ரிஷி பிரியன், ராகுல், அரவிந்த், அவினாஷ், ரஞ்ஜித், கோபி, சூர்யா, பிரசாந்த், இன்பா, ரோஷன், ஹரீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.