தாயுடன் சேர்ந்து மகள் வழிப்பறி : இரண்டு பேர் கைது..!

ஊருக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவரை தாக்கி பணம் பறித்த பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-08-06 02:15 GMT

கோப்பு படம்


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தாயுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுப்பட்ட இளம் பெண் உட்பட  2 பெயர் கைது செய்யப்பட்டனர். 

பெரம்பூர், வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் சிவராமன்( வயது 24). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.இவர் சொந்த ஊரான திருவண்ணாமலை செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் சிவராமனை சரமாரியாக தாக்கி அவரது சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பணம் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து சிவராமன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கோயம்பேடு போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து சிவராமனை தாக்கி பணம் பறித்து சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.தொடர் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது செங்குன்றத்தைச் சேர்ந்த மகாலட்சுமி( வயது 49), மற்றும் அவரது மகள் சந்தியா( வயது 21), என்பதும் மேலும் உடன் வந்த நபர்கள் இவர்களது கூட்டாளிகளான கனி(என்ற)சேட்டா( வயது 28),ராஜேஷ்( வயது 26), என்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் சந்தியா,சேட்டா ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள அவரது தாய் மற்றும் கூட்டாளியை தேடி வருகின்றனர்.சந்தியா கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சேட்டாவுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனியாக இருக்கும் நபர்களை குறி வைத்து தாயும், மகளும் சென்று முதலில் பேச்சு கொடுத்து பின்னர் கூட்டாளிகளை வரவழைத்து அவர்களை தாக்கி பணம் பறித்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். வழிப்பறியில் தாயுடன் சேர்ந்து மகள் ஈடுபட்ட சம்பவத்தில் மகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News