விநாயகர் சதுர்த்தி சிலைகள் வைப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம்..!
செங்குன்றம் அருகே விநாயகர் சதுர்த்தி வருவதை முன்னிட்டு சிலைகள் வைப்பது குறித்த காவல்துறை சார்பில் ஆன்மீக தலைவர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட ஆன்மிக தலைவர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புள்ளிலையன் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட செங்குன்றம், அம்பத்தூர், மணலி, எண்ணூர் ஆகிய சரகத்திற்கு கீழ் வரக் கூடிய பகுதிகளில் விநாயகர் சிலை அமைத்தல் மற்றும் ஊர்வலங்கள் பற்றி பொதுமக்கள் மற்றும் ஆன்மீக தலைவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் ராஜாராபர்ட், மணலி சரக உதவி ஆணையர் மகிமை வீரன், எண்ணூர் சரக உதவி ஆணையர் வீரக்குமார், அம்பத்தூர் சரக உதவி ஆணையர் கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் விநாயகர் சிலையை வைத்து வழிபடும் நேரத்தில் பொதுமக்களுக்கு எந்த ஒரு நெருக்கடி ஏற்படாதவாறும், நீரில் கரைக்க விநாயகர் சிலையை கொண்டு செல்லப்படும் ஊர்வலத்தின் போது மிகவும் கவனத்துடன் செயல்படுமாறும் , அரசு மற்றும் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இதில் செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் செங்குன்றம் புருஷோத்தமன், சோழவரம் ராஜ்குமார், மீஞ்சூர் காளிராஜ், அம்பத்தூர் கிருஷ்ணகுமார், மாதவரம் பால்பண்ணை வேலுமணி, திருப்பாலைவனம் முருகேசன், உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் விநாயகர் சிலை வைக்கும் ஆன்மிக தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.