முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!

செங்குன்றம் அருகே கிராண்ட் லையன் கிராம முத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றது.

Update: 2024-04-24 06:45 GMT

முத்துமாரியம்மன் கோயிலுக்கு பால் குடம் எடுத்து வந்த பக்தர்கள் 

கிராண்ட்லையன் ஊராட்சி விஷ்ணு நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை பௌர்ணமி விழா நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் கிராண்ட்லையன் ஊராட்சி விஷ்ணு நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 3-ம் ஆண்டு சித்திரை பௌர்ணமி விழா ஆலய நிர்வாகி தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கணபதி பூஜையுடன் 108-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் தலையில் வைத்து  பால்குடம் சுமந்தபடி விஷ்ணு நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் சென்றனர்.  பின்னர் அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


இதணைத்தொடர்ந்து அம்மனுக்கு வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கமுதிஅரசு, வார்டு உறுப்பினர் லோகேஷ்வரிகார்த்திக், சங்க செயலாளர் ராமசந்திரன்,

பொருலாளர் தினேஷ், சங்க ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரன், துனைசெயலாலர் மாடசாமி, முருககனேஷ், வெங்கடேசன், யுவராஜ், கிருபாகர், சண்முகம், கிருஷ்ணதாஸ், செல்வகுமார், விமல், சிவகுமார், ஞானசேகர், சம்பத், கோபாலகிருஷ்ணன், ராமன், ரவி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கினர்.

Tags:    

Similar News