செங்குன்றம், தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.!
தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் இல்லம் தேடி அரசு சேவை முகாம் நடைபெற்றது.;
செங்குன்றம் அருகே தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் இல்லம் தேடி அரசு சேவை முகாம்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் உள்ள சமுதாய நலகூடத்தில் தீர்த்தக்கிரியம்பட்டு மற்றும் அழிஞ்சிவாக்கம் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் இல்லம் தேடி அரசு சேவை முகாம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தீர்த்தக்கிரியம்பட்டு கவிதா டேவிட்சன், அழிஞ்சிவாக்கம் ஆஷா கல்விநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
புழல் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன், ஒன்றியகுழு பெருந்தலைவர் தங்கமணி திருமால், துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அனைவரையும் புழல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிசேகர், சித்ரா பெர்ணாண்டோ ஆகியோர் வரவேற்றனர்.முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார்.
பின்னர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு பொதுமக்களின் மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து சான்றுகளை வழங்க உத்தரவிட்டார்.இம்முகாமில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிமாறன், உதவி இயக்குநர் (தணிக்கை) ராஜ்குமார், புழல் ஒன்றிய அவைத்தலைவர் ஆர்.செல்வமணி, மாவட்ட பிரதிநிதி மு.ரமேஷ், வழக்கறிஞர் ஆர்.கே. பிரதீப்ராஜ், வருவாய் அலுவலர் கீதா, கிராம நிர்வாக அலுவலர்கள்சேகர், கார்த்திகா, நாகராஜ், திமுக நிர்வாகிகள் ஜெ.முருகன், ஆர்.ஸ்டாலின், கமலக்கண்ணன், தே.ரா. அருண்குமார், முருகன், எழில் ஆகியோர் பங்கெடுத்தனர்.
மேலும் தீர்த்தக்கிரியம்பட்டு துணைத்தலைவர் அருண்குமார், வார்டு உறுப்பினர்கள் வேளாங்கண்ணி சரவணன், சாந்தி மூர்த்தி, நாகஜோதி வாசுதேவன், தரணிதரன், விமலநாதன், ஜி.கே. தாஸ், கீதா வேல்முருகன், வளர்மதி ஈஸ்வரன், அழிஞ்சிவாக்கம் துணைத்தலைவர்செல்வி மதுரை முத்து, வார்டு உறுப்பினர்கள் செல்வமணி, அன்பு, திருஞானசம்பந்தன், பிரேமாபச்சையாப்பன், உமாமகேஸ்வரி,பிரசாத் ஊராட்சி செயலர்கள் உல்லாசம், பொன்னையன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.