ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் கூட்டம்..!

காரனோடையில் பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-08-31 05:30 GMT

சோழவரம் அருகே காரனோடையில் கே.ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் அருகே காரனோடை பஜார் அருகே பகுஜன் சமாஜ் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் மறைந்த மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் கூட்டம் மாவட்டத் தலைவரும் வெள்ளானூர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவருமான வி.கே. வெங்கட் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத் துணைத்தலைவர் வடகரை என்.ஜானகிராமன், மாவட்டச் செயலாளர் சந்தோஷ்குமார், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சாந்தி, மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் பகுஜன் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர் பி.ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு நினைவேந்தல் பேருரையாற்றினர்.


முன்னதாக மாதவரம் தொகுதி முன்னாள் தலைவர் சோழவரம் கிரி, மாதவரம் தொகுதி மாவட்டச் செயலாளர் நாகராஜன், மாதவரம் தொகுதி மேற்கு தலைவர் தீபக் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.இதில்

மாநில ஒருங்கிணைப்பாளர் மைக்கேல்தாஸ், மாநிலச் செயலாளர் பெரியாரன்பன், சேகர், மாவட்டத் தலைவர்கள் பிரேம், சார்லஸ், பாக்ஸர் சமரசன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆனந்தன், மாவட்ட அமைப்புச் செயலாளர் சூர்யா, நிர்வாகிகள் மீரான் மொய்தீன், லிங்கன், நாகராஜ், கிருபா, குப்பன்ராஜ், பாலமுருகன், சாம்சித்தார்த், பாக்கியராஜ், ஜெகன், பாண்டியன், சரண்ராஜ், தொகுதி தலைவர்கள் மாறன்ராஜ், ஏசுதாஸ், ஜெகதீஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.முடிவில் மாதவரம் தொகுதி துணைத்தலைவர் (மேற்கு) ஜான்திலிப் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News