போதை ஆட்டோ ஓட்டுநருக்கு சிறை..!
புழலில் குடிபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு ஒருவர் கடித்து காயப்படுத்திய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு.;
புழலில் குடிபோதையில் இருவருக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஒருவரை கடித்தவர் கைது. ஆட்டோ பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த மாரம்பேடு சேர்ந்த முருகன் ( வயது 32) நேற்று முன்தினம் இரவு தனது வேலையை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் செல்லும் வழியில் காவாங்கரை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் தனது நண்பரை சந்திக்க நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஆட்டோவிற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக வந்த சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி ( வயது 45). குடிபோதையில் முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் பழனி, முருகனை கையால் தாக்கியதோடு பற்களால் கைகளில் பல இடங்களில் கடித்துள்ளார். இதனால் காயமடைந்து துடித்த முருகனை அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை கைது செய்து அவரிடமிருந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.