tiruchendur murugan temple history in tamil திருச்செந்துாரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்: முருகா...முருகா... முருகா...முருகா...

tiruchendur murugan temple history in tamil கடற்கரை யோரத்தில் வீற்றிருக்கும் திருச்செந்துார் செந்தில்நாதன் முருகனின் இரண்டாவது படை வீடு ஆகும்....

Update: 2023-07-04 06:29 GMT

திருச்செந்துாரின் கடலோரத்தில்  அரசாங்கம் நடத்தும் செந்தில்நாதன் சிறப்பு அலங்காரத்தில்  (கோப்பு படம்)

 tiruchendur murugan temple history in tamil

திருச்செந்துார் கோயிலானது இயற்கையான கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இது முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடாகும். இத்தலம் திருநெல்வேலிக்கு கிழக்கில் சுமார் 56 கி.மீ. தொலைவு துாத்துக்குடிக்கு தெற்கில் 40 கி-மீ. தொலைவில் அமைந்துள்ளது.

முருகப்பெருமான சூரபத்மன் மீது படையெடுத்து வென்று தேவர்களை மீட்டார். வெற்றி வாகை சூடி இத்தலத்தில் தங்கியதால் திருச்செந்துார் எனப் பெயர் உண்டாயிற்று. அழகிய சிற்பங்களுடன் 9 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக விளங்க கோயில் மூன்று பிரகார அமைப்புடன் உள்ளது.

மூலவருக்கு வலது திருவடியின் அருகில் வெள்ளிச் சீபலியும் இடது திருவடியின் அருகில் தங்கச் சீபலியும் காட்சி அளிக்கிறது. நான்கு திருக்கரங்களில் ஒன்றில் செபமாலையும், மற்றொன்றில் குலிசாயுதமும் ஏந்தியுள்ளார்.

மூலவர் செந்திலாண்டவர் உலோகத் திருமேனியாதலால் ஆண்டிற்கு 36 அபிஷேகங்கள் மட்டுமே நடைபெறும். திருநீற்று அபிஷேகத்தில் மூலவரைக் காணக் கண் கோடி வேண்டும். இதனைக் காண்பதைப் பெரும் பேறாக கருதுகின்றனர் பக்தர்கள்.

 tiruchendur murugan temple history in tamil


 tiruchendur murugan temple history in tamil

மூலஸ்தானத்தில் கேரள தாந்திரிக முறைப்படி 9 கால பூஜை நடத்தப்படுகிறது. பிற சன்னதிகளில் சிவ ஆகம முறைப்படி பூஜை நடத்தப்படுகிறது.பிரதான உற்சவர் சண்முகர் தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். மூலவருக்கு உரிய பூஜை மற்றும்மரியாதை இவருக்கும் செய்யப்படுகிறது. இத்தலத்தில் போர் புரிந்த பின் தெய்வயானையை முருகன் மணம் புரிந்து இருந்தாலும் வள்ளி இச்சா சக்தி ஆவதால் பள்ளியறை வள்ளியம்மன் கோயிலில் உள்ளது. அத்தலத்தின் பிரசாதம் அரிசிப்புட்டு ஆகும். திருநீறு பன்னீர் இலையில் சுமார் 2500 ஆண்டுகளாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஆதிசங்கரர் தாம் எழுதிய சுப்ரமணிய புஜங்க நுாலில் எழுதியுள்ளார்.

ஐந்து வயது வரை ஊமையாக இருந்த குமரகுருபருடைய நாக்கில் முருகன் தன் வேலினால் எழுதி பேச வைத்து அற்புதம் நிகழ்த்தினார். குமரகுருபரன் முருகன் மேல் கவிதையாக கந்தர் கலி வெண்பா என்னும் அற்புத நுாலை இயற்றினார். தேவராயர் திருச்செந்துார் முருகனைப் பற்றி புகழ் பெற்ற சஷ்டிக்கவசம் என்னும் பாடலைப் பாடினார்.

 tiruchendur murugan temple history in tamil


 tiruchendur murugan temple history in tamil

செந்துார் முருகன் இலங்கை மன்னன் கண்டியரசன் கனவில் தோன்றிச் சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்கவிடு என்று ஆணையிட்டார். கடலில் மிதந்து வந்த அம்மரத்தை கடலோரத்திலிருந்த எருமை கரை சேர்த்தது. தங்கத்தகடுகள் பொதியப்பட்ட சந்தன கொடி மரத்தை இன்றும் காணலாம்.

கோபுரம்கட்டும் திருப்பணியை மேற்கொண்டவர் திருவாவடுதுறை தேசிக மூர்த்திஸ்வாமிகள் . பணியாளர்களுக்கு கூலியாக கொடுக்கப்பட்ட விபூதி இலையுடன் துாண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டியதும் உழைப்புக்கேற்ற ஊதியம் விபூதியின் உள்ளே இருக்கும் அற்புதம் நிகழ்ந்தது. இவ்வற்புதம் 6 ஆம் நிலை கோபுரம் கட்டும் வரை தான். வருந்திய இவருக்கு காயல்பட்டினம் ’’ சீதக்காதி’’ என்பவரிடம் செல்ல முருகன் கனவின் மூலம் பணித்தார். நன்கொடையாக சீதக்காதி கொடுத்த ஒருமூட்டை உப்பு, மறு நாள் காலையில் பொற்காசுகளானது. இதைக்கொண்டு திருப்பணி நடைபெற்றது.

 tiruchendur murugan temple history in tamil


 tiruchendur murugan temple history in tamil

முருகனே தம் கைவேலால் உண்டாக்கிய நாழிக்கிணறு எனும் அற்புதத் தீர்த்தமும் மற்றும் வதனாரம்ப தீர்த்தமும் இங்கு உள்ளது. இங்கு கார்த்திகை நட்சத்திர நாளில் நீராடி வழிபடுவது சிறப்பு.

டச்சுக்காரர்கள் நடராஜர் சிலையையும், ஆறுமுகன் சிலையையும், கொள்ளையடித்து கப்பலில் சிறிது தொலைவு சென்ற போது வீசிய புயல் காற்றால் அச்சமடைந்து முதலில் நடராசர் சிலையை வீசியும், புயல் நிற்காததால் பின் ஆறுமுகனார் சிலையையும் வீசிய பின் புயல் நின்றது.

சிறிது காலம் கழித்து வடமலையப்பன் பிள்ளை என்பவர் கனவில் முருகன் தோன்றி வதனாரம்ப தீர்த்தத்திற்கு நேராக காத துாரம் வந்தால் தாம் இருக்கும் இடத்தில் எலுமிச்சை பழம் மிதக்கும் எனவும் வானில்இருட்டை கருடன் வட்டமிடும் என்று அடையாளம் கூறிய இடத்தில் மூழ்கினால் , முதலில் நடராசர் சிலையும், பின் சண்முகர் சிலையும் அகப்பட்டன.

இத்தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கள், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்களுக்கும், தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு.

 tiruchendur murugan temple history in tamil


 tiruchendur murugan temple history in tamil

பக்தர்களால் முழுமையான அர்ப்பணிப்புடன் பூரணமாக நடத்தப்படும் கும்பாபிஷேகத்திற்கு இறைவன் ஏற்றுக்கொண்டு ஆசி வழங்கும் விதமாக கருடன் வட்டமிடும். கடந்த 3.7.2010 அன்று செந்துார் திருக்கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தன்று இருமுறை கருடன் வட்டமிட்டது கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

நடை திறப்பு

காலை 5மணி

பூஜைகள் ஒன்பது கால பூஜைகள்:

சுப்பிரமணியர் சுப்ரபாதம் காலை 5.10- திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை காலை 5.25-விஸ்வரூப தீபாராதனை, காலை 5.35-கொடி மர நமஸ்காரம், காலை 5.45-உதய மார்த்தாண்ட அபிஷேகம் , காலை 6.15-திரிகாலசந்தி ஒத்த கட்டளை ,காலை 8.00-கலசபூஜை , காலை 10.00-உச்சி கால அபிஷேகம் , காலை 10.30-உச்சி கால தீபாராதனை மற்றும் ஸ்ரீ பலி, பகல் 12.00-சாயரட்சை தீபாராதனை. மாலை 5.15-அர்த்த ஜாம அபிஷேகம், இரவு 7.15- தீபாராதனை, இரவு 8.00-ஏகாந்த தீபாராதனைமற்றும் ஸ்ரீபலி, இரவு 8.15-பள்ளியறை தீபாராதனை,நடை சாத்துதல், இரவு 9.00-ஸ்ரீபலி கற்பூரம் சண்முகர் ரகசிய தீபாராதனை தொடர்ந்து நடைபெறும்.

திருவிழாக்கள்

வைகாசி -விசாகம் நட்சத்திரம் தினத்தன்று சிறப்பு வழிபாடு சுவாமி புறப்பாடு, ஆவணி- ஆவணி பெருந்திருவிழா (12 நாட்கள் )ஐப்பசி -கந்த சஷ்டி விழா 6 நாட்கள், மற்றும் சூரசம்ஹாரம் 7 ஆம் நாள் திருக்கல்யாணம், மாசி- மாசிப்பெருந்திருவிழா (12 நாட்கள் )

 tiruchendur murugan temple history in tamil


 tiruchendur murugan temple history in tamil

பஞ்சலிங்க தரிசனம்

கருவறையின் பின்புறம் உள்ளது. முருகப்பெருமாள் பஞ்சலிங்கத்தை வழிபட்டு சூரனை வதம் செய்ததாகக் கூறப்படுகிறது. மூலவருக்கு தீபாராதனை காட்டியபின் பின்புறம் உள்ள பஞ்சலிங்கங்களுக்கும் காட்டுவர்.

மூலவர் சன்னதியில் பிரசாதமாக வழங்கப்படும் சந்தனம் மற்றும் பன்னீர் இலை விபூதி நோய் நீக்கும் மருந்தாகும். கடலின் அருகில் உள்ள நாழிக்கிணற்றில் தண்ணீர் பெருகி வருவதுவியப்புக்குரியது. இங்கு நீராடுவர். கந்த சஷ்டி திருவிழா நாட்களில் பக்தர்கள் விரதத்தை மேற்கொள்கின்றனர். குரு ஸ்தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. ஆறு திருமுகங்களையும், பன்னிரு திருக்கரங்களையும், பெற்ற உற்சவர் விசுவாமித்திரர் இத்தலத்தில் வழிபட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம். அவன் பூசை செய்த விக்கிரகங்கள் இங்குள்ளன. கட்டபொம்மனின் தந்தை ஜெவீர கட்ட பொம்மன் இறைவனுக்கு உச்சி கால பூஜை முடிந்த பின்னரே உணவு உட்கொள்ளுதல் விரதமுடையவர்.

கோயிலில் பூசை முடிவதை அறிவதற்காக, செந்துாருக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்குமிடையே உள்ள 40 மைல்களில் 3 மைலுக்கு 1 மண்டபம் வீதம் நகாரா (முரசு) மண்டபங்களை அமைத்து முழங்க செய்தார்.

Tags:    

Similar News