அரசு வேலை, பதவி உயர்வு... பங்குனி விரதமிருந்தால் இத்தனை நன்மைகளா?

Panguni Uthiram 2023 in Tamil-தனியாரில் கிடைக்கும் வேலைகளை பார்த்துக் கொண்டே அரசு வேலைக்காக முயற்சி செய்துகொண்டிருப்பவரா நீங்கள். அப்படியென்றால் முருகனை இந்நாளில் வழிபட்டு விரதமிருந்து வேலைக்கான வாய்ப்புகளைப் பிரகாசப்படுத்திக் கொள்ளுங்கள்

Update: 2023-04-04 03:36 GMT

Panguni Uthiram 2023 in Tamil-பங்குனி என்றாலே வெயில் பல்லைக் காட்டிக் கொண்டு கடுமையாக வீசும். அதோடு மக்கள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு படையெடுப்பார்கள். தமிழர்களின் கடவுள் முருகனை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விஷேச தினம் முருகனுக்குரியதாக இருக்கும். அந்த வகையில் மிகவும் விஷேசமான தினம் இந்த பங்குனி உத்திரத் திருநாள்.

கல்யாண விரதம் எனும் மற்ற பெயர்களிலும் இந்த நாளில் விரதம் எடுக்கப்படுகிறது. இந்நன்னாளில் விரதமிருந்து முருகனை நினைத்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. பங்குனி உத்திர திருநாளில் இருக்கும் விரதத்தால் இன்னும் நிறைய பலன்கள் கிடைக்கின்றன. அவை குறித்து இந்த பதிவில் தொடர்ந்து காண்போம்.


அரசு வேலை

பள்ளி, கல்லூரி முடித்துவிட்டு நமக்கு இருக்கும் வாய்ப்புகளில் தனியார் மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் இல்லையென்றால் சுயதொழில். சுயதொழில் செய்ய அப்பா பெரிய பேக்ரவுண்ட் இருக்க வேண்டும் அல்லது லோனுக்காக அலைந்து திரிந்து நம்முடைய யோசனையை ஏற்றுக் கொண்டு வங்கிகள் லோன் தரவேண்டும். அதனாலேயே பலரும் வேலைவாய்ப்புகளைத் தேடி செல்கின்றனர்.

தனியாரில் கிடைக்கும் வேலைகளை பார்த்துக் கொண்டே அரசு வேலைக்காக முயற்சி செய்துகொண்டிருப்பவரா நீங்கள். அப்படியென்றால் முருகனை இந்நாளில் வழிபட்டு விரதமிருந்து வேலைக்கான வாய்ப்புகளைப் பிரகாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

நன்றாக படித்து அரசு வேலைக்கு தேர்வு எழுதியிருந்தாலும் சில சமயங்களில் நமக்கு நேரம் சரியில்லை என்றால் வேலை தட்டிக்கழித்துக் கொண்டே இருக்கும். பங்குனி உத்திர திருநாளில் விரதமிருந்து வேண்டிக் கொண்டால் அரசு வேலை கிடைக்கும்.

12 திருக்கரங்களையுடைய முருகனுக்கு உகந்த எண்ணான 12. பங்குனி மாதங்களில் 12வது மாதம். உத்திரம் நட்சத்திரமும் 12வது நட்சத்திரம் என பல விசயங்கள் இங்கு பொருந்திப் போகின்றன.


வழிபடும் முறைகள்

வைகாசியில் வரும் பவுர்ணமிக்கு விசாகம் என்றும், தை மாத பவுர்ணமிக்கு தைப்பூசம் என்றும் சொல்வது போல பங்குனியில் வரும் பவுர்ணமி உத்திரம் என்று சொல்லப்படுகிறது. இந்த மூன்று பவுர்ணமிகளும் முருகனுக்கு உகந்த விரத நாட்களாகும்.


பவுர்ணமி எப்போது

பங்குனி உத்திரம் என்பதே பவுர்ணமி உருவாகும்போதுதான். இதனால் ஏப்ரல் 5ம் தேதிதான் பங்குனி உத்திரம் என்று ஒரு தரப்பினரும். அப்படியில்லை உத்திரம் நட்சத்திரம் தொடங்கும்போதுதான் உத்திரம் என்று இன்னொரு தரப்பினரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் தமிழகத்தில் ஏப்ரல் 4ம் தேதியே உத்திரம் கடைபிடிக்கப்படுகிறது.

வழிபாட்டின் பலன்கள் 

கடன் தொல்லை நீங்கும்

திருமணம் கைகூடும்

குழந்தை பேறு கிடைக்கும்

செல்வங்கள் பெருகும்

சுபகாரியங்களுக்கான நாள் நெருங்கி வரும் 



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News