Aries horoscope in Tamil சூரியன் அதிபதியான மேஷ ராசிக்காரர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

மின்னல் வேகத்தில் முன்னணிக்கு வருவதில் மேஷ ராசிக்காரர்களுக்கு இணையானவர்கள் யாரும் இல்லை.

Update: 2023-04-13 05:41 GMT

மேஷ ராசிக்காரர்கள் பற்றிய பொதுவான பலன்

அமைதியானவர், ஒழுக்கமானவர், மனித நேயம் கொண்டவராக இருப்பார். இரக்கம், மனித நேயம், உண்மையின் சொரூபமாக திகழும் இவர், தர்மத்திலும் தலை சிறந்தவராக இருப்பார். மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக வாழ்ந்து காட்டுவார். வாழ்க்கை பற்றிய தனி சித்தாந்தத்தை வகுத்து அதன்படி வாழ்பவர்.

எதிலுமே வெற்றி பெறும் யோகம் கொண்டவர். முடியாததை முடித்துக் காட்டும் குணமுடையவர். எதையும் விரைவில் செய்து முடிப்பார். சுதந்திர மனப்பாங்கும், மற்றவர்களுக்கு எந்த இடையூறு அளிக்காதவராகவும் இருப்பர். தனது லட்சியத்தை நோக்கி பயணிப்பர். தான் செய்யும் காரியத்தின் மீது சந்தேகம் கொண்டவராகவும் இருப்பர். அன்பானவர், பெரியவர்களை மதிப்பவர்கள். இதனால் இவர்களை எல்லோரும் விரும்புவர். இவர்கள் எவருடனும் பணியாற்ற உகந்தவர். தலைவராக இருக்கவும் தகுதியானவர்கள். இவர்கள் யாருடைய ஆலோசனையையும் கேட்க மாட்டார்கள், எடுத்தெறிந்து பேசிவிடுவர். இவர்களுக்கு சூரியனின் ஆசி இருப்பதால் அதற்கான குணங்களும் இருக்கும்.

புத்திசாலித்தனமாக எந்த காரியத்தையும் உற்று நோக்குவதால் எல்லா பணிகளிலும் லாபம் கிட்டும். மேஷ ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் மிகச் சிறப்பாக உள்ளது.


மேஷ ராசியில் பிறந்தவர்கள் தலைசிறந்த தலைவராகவும் புகழ்பெற்றவராகவும் இருப்பர். இந்த ராசி செவ்வாய் கிரகத்தின் பார்வையில் இருப்பதால் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிப்பர். இவர்கள் அரசியலில் வெற்றி பெரும் வாய்ப்பு உண்டு. பெரிய தலைவராக இருந்து மக்களின் அபிமானத்தைப் பெறுவர். யாராலும் முடியாத காரியம், செயல்கள் இவற்றை செய்து முடித்து பெயர் எடுப்பதே இவர்களுக்கு பிடித்தமானது. காவல்துறை, ராணுவம், விஞ்ஞான், மின்சாரம் மற்றும் வரி தொடர்பான பணிகளில் பணியாற்றுவது சிறப்பானது.

இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

இந்த ராசிதாரர் எந்த பணியில் இறங்கினாலும் அதில் முழு கவனத்தையும் காட்டுவார்கள். இவர்களுக்கு நடனத்திலும் ஆர்வம் இருக்கும். ஆலைகள், துணி, மரச்சாமான்கள், புத்தகத் துறையில் பணியாற்றினால் நலம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுடன் கூட்டணி அமைத்து தொழில் செய்தால் சிறப்பு. இந்த ராசிக்காரர்களை நண்பர்களாக வைத்துக் கொள்வதும் நல்லது

மேஷ ராசிக்காரர்கள் தங்களது குடும்பத்தினர் மீது அதிக பாசமும், ஆதரவும் கொண்டவர்களாக இருப்பர். தனது குடும்பம், தனது உறவுகள், தனது சமுதாயம் என ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்வார்கள். தனது எண்ணம் போல வாழ்வார். மேஷ ராசிக்காரர்கள் தனது துணையின் மீது அளவுக்கதிகமான அன்பு வைத்திருப்பார். தனது குழந்தைகளை நண்பர்கள் போல பாவிப்பர்.

இவர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள். தான தர்மத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள். பயந்த சுபாவமுடையவர்கள். இவாக்ளுக்கு கோபம் எளிதில் வரும். எதையும் எளிதில் ஏற்றுக் கொள்ளாதவர்கள். எப்போதும் யாருடனாவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இதில் சிலருக்கு பொறாமை குணம் கொண்டவராகவும், எப்போதும் தனது தவறை ஒப்புக் கொள்ளாதவராகவும் இருப்பார்.

மேஷ ராசிக்காரர்களுக்கு சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்களாகும். சிகப்பு நிறத்தை எப்போதும் உடன் வைத்திருப்பது நல்லது.

இவர்களது ராசி செவ்வாய் கிரகத்தின் பார்வையில் இருப்பதால் இவர்களுக்கு செவ்வாய்க்கிழமை உகந்ததாகும். புதன் கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் உகந்ததாகும். வியாழக்கிழமை மட்டும் உகந்ததல்ல.

Tags:    

Similar News