நேர்மறை எண்ணத்தோடு காலையில குட்மார்னிங்க சொல்லுங்க... செயல்கள் சிறக்கும்

Positive Good Morning in Tamil-காலை நேரத்தில் நீங்கள் பார்க்கும் நபர்களுக்கு புன்சிரிப்போடு காலை வணக்கத்தைச் சொல்லுங்க...உங்களுக்குள்ளேயே புத்துணர்ச்சி ஏற்படும்...படிங்க..

Update: 2022-12-03 08:49 GMT

Positive Good Morning in Tamil


Positive Good Morning in Tamil-நாகரிக வாழ்க்கை முறையானது நம்மை நாள்முழுவதும் பாடாய் படுத்துகிறது. ஓய்வு எடுப்பதற்கு நேரம் இல்லாதது போல் ஒரு பிரமையாகவே நம் பெரும்பாலான வாழ்க்கை கழிந்துவிடுகிறது. அதுவும் இந்த தொழில்நுட்ப சாதனங்களின் வரவுக்கு பின்னர் சற்று 10 நிமிடம் நம்மால் அமைதியாக கண்களை மூட முடிவதில்லை. அதற்குள் ஒரு ரிங் வந்துவிடும் . துாக்கம் போயே போச்சுதான்... சரி வாங்க நம் சப்ஜெக்ட்டுக்கு வருவோம்...

நீங்க காலையில் எழும்போது என்ன மனநிலையில் உள்ளீர்களோ? அதுதான் நாள்முழுக்க...தெரியுமா? சங்கதி... புத்துணர்ச்சியோடு படுக்கையை விட்டு எழுந்தீர்கள் என்றால் அன்று நீங்கள் கை வைக்கும் காரியமெல்லாம் டபுள் சக்ஸஸ் தான் போங்க. எப்போதும் நேர்மறை சிந்தனைகள் நமக்கு நல்ல பாசிடிவ்வான ரிசல்ட்டைத்தான் எப்போதும் கொடுக்கும்.அதுவே எதிர்மறையானால்தான் மிகப் பெரும் திண்டாட்டமாகி போய்விடும்.

இன்று சோஷியல் மீடியா வந்தவுடன் பலரும் காலையில் எழுந்தவுடன் பல்துலக்குவதை விட்டுவிட்டு பாதிபேர் செல்லைத்தான் துழாவுகின்றனர். ஏதாவது முக்கியமான மெசேஜ் வந்துள்ளதா? என்று பார்த்தால் பலரும் குட்மார்னிங் சொல்வதுதான் பெரிதாக கண்களுக்கு தெரிய வரும். பார்த்துக்கோங்க...நேரிடையாக குட்மார்னிங் சொல்லக்கூட நேரமில்லாம் எத்தனை பேர் இந்த உலகில் வாழ்ந்துகொண்டுள்ளனர் என்று....

அதுவும் இந்த கம்ப்யூட்டருடன் ஆபீசில், வீட்டில் போராடவே பலருக்கு நேரம் விரயமாகிவிடுகிறது. அதாவது நெட் கனெக்‌ஷன் கிடைத்தால் சிஸ்டம் வேலை செய்யாது. சிஸ்டம் வேலை செய்யும்போது நமக்குநெட் கனெக்‌ஷன் சரியாக கிடைக்காது. இதுதாங்க வாழ்க்கை... இதில் பாதிப் பேர் மனஉளைச்சலாகிவிடுவார்கள். அதுவும் ஆபீசில் கஸ்டமர்களைச் சந்திக்கும் வேலை என்றால் டென்ஷனாகிவிடும். இதுபோல் பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் காலையில் நல்லபுத்துணர்ச்சியோடு நம் குட்மார்னிங்கைப் பல பேரிடம் பகிர்ந்துகொண்டால் அந்த நாள் நமக்கு இனிய நாளாக அமையும் என்பதில் எள்ளளவு சந்தேகம் இல்லை.

ஆனால் ஒரு சிலர் இருக்கிறார்கள். அது அதிகாரிகளாகட்டும் மற்றவர்களாகட்டும் ஒருவர் தன் கையைத்துாக்கி வணக்கம் சொன்னால் தயவு செய்து அவரை மதித்து நீங்களும் வணக்கம் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். ஒரு சிலர் எதிரே வருபவர்கள் வணக்கம் வைத்தால்கூட கண்டுகொள்வதில்லை. இது ஏதோ போல் ஆகி விடுகிறது. காலையில் வேலைக்கு வருகிறீர்கள் உங்கள் சக பணியாளர் அல்லது உங்களிடம் வேலை பார்ப்பவர் உங்களுக்குவணக்கம் வைக்கும்போது எதிர்வினை செய்யுங்கள். அப்போதுதான் அவர்களுக்கும் காலை வேலையில் மனதில் உற்சாகம் பிறக்கும். நீங்கள் அதனை மறுக்கும்போது அவர் ஏதோ இழந்தது போல் ஆகிவிடுவார்.இவர் என்ன வணக்கமே வைக்கலை. மூடு சரியில்லையோ?... என தேவையில்லாத கற்பனைகள் எதிராளிக்கு மனதில் ஓடும்.. தயவு செய்து அதற்கு இடம்அளிக்காதீர்கள். மனிதர்களை மனிதர்கள்தான்மதிக்க வேண்டும்...என்ற நியமக் கோட்பாட்டின் படி வணக்கம் வைக்கும் விஷயத்தில் எப்போதும் பாசிட்டிவ்வாகவே இருங்க... அப்புறம் பாருங்களேன்... வேலை எப்படி நடக்கிறது என்று. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News