காற்று மாசுபாடு தடுக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

காற்று மாசுபாடு தடுக்க அக்டோபர் 1-ம் தேதி முதல் 2023 பிப்ரவரி 28-ம் தேதி வரை கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

Update: 2022-06-23 13:11 GMT

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

உலகம் முழுவதும் சுமார் 6, 475 நகரங்களில் மாசு தரவுகளின் கணக்கெடுப்பை சுவிஸ் மாசு தொழில்நுட்ப நிறுவனம் நடத்தியது. அதன்படி உலக சுகாதார அமைப்பால் காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 93 நகரங்களில் 10 மடங்கு அதிக மாசுபாடு இருப்பது தெரியவந்தது. 2021-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த மாசு அளவு மேலும் மோசமடைந்தது. உலகின் காற்று மாசுபாடு அதிகம் உள்ள தலைநகரமாக இந்தியாவின் புதுடெல்லி உள்ளது. அதேபோல் உலகின் அதிக காற்று மாசுபாடு உடைய நாடாக வங்காளதேசம் உள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு, தீர்க்கமுடியாத பிரச்சினையாகவும், மாநில அரசுக்கு பெரும் தலைவலியாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக குளிர் காலத்தில் காற்றுமாசுபாடு பலமடங்கு அதிகரிக்கும். டெல்லி மாநிலத்தில், அதீத காற்று மாசுபாடு காரணமாக பள்ளி, அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கும் சூழ்நிலை கூட சில சமயங்களில் ஏற்படுவது வழக்கம்.

இதற்கிடையில், காற்று மாசுபாடு கட்டுப்படுத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி அரசு முனைப்புடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைவதற்கு 2022அக்டோபர் 1ம் தேதி முதல் 2023பிப்ரவரி 28-ம் தேதி வரை தடை விதித்து டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். குளிர்காலங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News