தஞ்சையில் உள்ள 8 தொகுதிகளில் 6 தொகுதி திமுக வசமாகிறது
தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது இதில் திமுக 6 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.;
தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி என 8 தொகுதிகள் உள்ளது.
இதில் திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 6 தொகுதிகளில் திமுக வாக்கு எண்ணிக்கை துவங்கிய முதல் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
அதிமுகவும் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கமும், பாபநாசம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபிநாதனும் முன்னிலை வகிக்கின்றனர். திமுக வேட்பாளர்கள் கோவி செழியன், அன்பழகன், துரை சந்திரசேகரன், நீலமேகம், அண்ணாதுரை, அசோக் குமார் ஆகிய திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்