காங்கயம் தொகுதியில் திமுக வெற்றி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.பெ. சாமிநாதன் வெற்றி பெற்றார்.;
திருப்பூர் மாவட்டம் காங்கயம் சட்டசபை தொகுதியில், மொத்தம் 27 பேர் போட்டியிட்டனர். இதில், திமுக மு.பெ.சாமிநாதன் 7331 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் மு.பெ. சாமிநாதன்-94197 ஓட்டுகள், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.எஸ். ராமலிங்கம்-86,866 ஓட்டுகள், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிவானந்தம்-11.307 ஓட்டுகள், அமமுக-ரமேஷ்-474 ஓட்டுகள் பெற்றனர்.