பூவை ஜெகன் மூர்த்திக்கு உற்சாக வரவேற்பு
கே.வி. குப்பம் தொகுதியில் வெற்றி பெற்ற புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு உற்சாக வரவேற்பளித்த கட்சி நிர்வாகிகள்;
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தொகுதியில் அதிமுக சார்பில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் அதற்கான சான்றை பெற்ற அவர் இன்று வீடு திரும்பினார்.
வேலூர் முதல் அவரது இல்லம் அமைந்துள்ள நேமம் வரையில் கட்சி நிர்வாகிகள் வழி எங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக செம்பரம்பாக்கம் பகுதியில், புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் பழஞ்சூர் வின்சென்ட் தலைமையில் பட்டாசுகள் வெடித்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது ஜெகன் மூர்த்தி அவர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். பின்னர் ஆளுயர மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து ஜெகன் மூர்த்தி, பூந்தமல்லியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.