எதிர்க்கட்சியாக பொறுப்புடன் பணிகளை நிறைவேற்றுவோம் : ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை
பொறுப்பான எதிர் கட்சியாக இருந்து செயல்படுவோம் என்று இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களையும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் பெற்றன. திமுக அதிக இடங்களை பிடித்து ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் பெரும்பான்மையுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார். அதிமுக இரண்டாம் இடம் பெற்று எதிர்க்கட்சியாக அமர உள்ளது.
இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் இதயமார்ந்த நன்றி என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒருபக்கம் ஆளும் கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியாக இருக்கும். தேர்வு செய்யப்பட ஆட்சி சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் கடமை நமக்கு உள்ளது. எதிர்க்கட்சி என்னும் பெரிய பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அதை நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளனர்.